விதிமுறைகளை மீறியமைக்காக சுவீடன் கால்பந்து கூட்டமைப்புக்கு பிபா 71 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்துள்ளது ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகள் அங்கீகாரம் பெறாத நிறுவனங்கள் தயாரிக்கும் விளையாட்டு உபகரணங்களை விளம்பரம் படுத்தக்கூடாது என பிபா நிபந்தனை விதித்திருந்தது.
இந்தநிலையில்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்ட போது சுவீடன் இவ்வாறு அங்கீகாரம் பெறாத நிறுவனங்கள் தயாரிக்கும் விளையாட்டு உபகரணங்களின் விளம்பரங்களை வெளியிட்டுள்ளமைக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்துள்ள சுவீடன் கால்பந்து கூட்டமைப்பு தாங்கள் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.