179
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் படத்திற்கான படப்பிடிப்பு வங்காளத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி தமிழகம் திரும்பும் படக்குழு அடுத்து விரைவில் மீண்டும் டேராடூனுக்கு செல்லவும் உள்ளது.
இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாலும் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதையில் ரஜினிகாந்த் கல்லூரியின் பேராசிரியராக நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.மற்றுமொரு முக்கிய செய்தியும் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love