193
2010இல் வெளியான தமிழ்ப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் திரைப்படங்களை விமர்சிக்கும் விதமாகவும் கேலி செய்யும் விதமாக புதிய பாணியில் அப் படம் அமைந்தது. இந்த நிலையில் தமிழ் படம் இரண்டு தமிழகத்தின் பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளது.
தமிழக ஆட்சி முதல் முன்னணி நடிகர்களின் சமீபத்திய திரைப்படங்கள் வரை விமர்சித்துள்ள தமிழ்ப் படத்தின் படக்குழுவினர் இன்று வெளியிட்ட மற்றுமொரு சுவரொட்டி (போஸ்டர்) மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்கார் படத்தை கேலி செய்யும் விதமாக இந்தப் போஸ்டர் அமைந்துள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களலும் இப் போஸ்டார் தீவிரமாக பகிரப்படுகிறது.
சி.எஸ்.அமுதன் தமிழ்படத்தின் இரண்டாவது பாகமாக `தமிழ்ப்படம் 2’ஐ இயக்கியுள்ளார். சிவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் முதல் தற்போது வரை பாகுபலி, நடிகையர் திலகம், டார்க் நைட், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட படங்களை சமீபத்தில் கலாய்த்து சுவரொட்டிகள் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது படம் வெளியீட்டு திகதிக்கு விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் சுவரொட்டியை (போஸ்டரை) கிண்டலடித்து வெளியிட்டப்பட்டுள்ளது.
Spread the love