Home இலங்கைEPDP ஜெகனுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது….

EPDP ஜெகனுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது….

by admin

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஜெகன் என அழைக்கப்படும் வேலும் மயிலும் குகேந்திரன் இரட்டை குடியுரிமை கொண்டவர் எனும் அடிப்படையில் யாழ்.,மாநகர சபை உறுப்பினராக அங்கம் வகிக்க தகுதியற்றவர் என அவருக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கே நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி.மணிவண்ணன் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வசிக்கவில்லை எனவும் , அதனால் உறுப்பினராக இருக்க முடியாது எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More