பிரதான செய்திகள் விளையாட்டு

ஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் முதலாவதாக நெதர்லாந்துடன் விளையாடுகின்றது

ஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் அணி முதன்முறையாக நெதர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நெதர்லாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் முதல் ஒருநாள் போட்டி ஓகஸ்ட் முதலாம் திகதியும் 2-வது போட்டி 3ம் திகதியும் நடைபெறவுள்ளதது.

2014 ஆம் ஆஷ்டு ஒருநாள் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை இழந்த நெதர்லாந்து அணி 2015-ல் உலக சம்பியன் லீக் தொடரில் சம்பியன் பட்டடத்தினை வென்றதால் மீண்டும் அந்தஸ்து பெற்றிருந்தது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி; இந்தியாவுடன் முதல் போட்டியிலும் அயர்லாந்து அணி பாகிஸ்தானுடனும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.