Home பிரதான செய்திகள்சர்வதேச இருபதுக்கு இருபது துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசை பட்டியல் – ஆரோன் பின்ச் முதலிடம்

சர்வதேச இருபதுக்கு இருபது துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசை பட்டியல் – ஆரோன் பின்ச் முதலிடம்

by admin


சர்வதேச இருபதுக்கு இருபது துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், பாகிஸ்தானின் பஹர் ஜமான், இந்தியாவின் கே.எல்.ராகுல் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும் பிடித்துள்ளனர்.

சிம்பாப்வே, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மற்றும் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது போட்டித் தொடர்களைத் தொடர்ந்து இந்தப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவின் இருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் முத்தரப்புத் தொடரின் ஐந்து போட்டிகளில் 306 ஓட்டங்களைப் பெற்றதையடுத்தே, நான்காமிடத்திலிருந்து முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதேவேளை, குறித்த தொடரின் ஐந்து போட்டிகளில் 278 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹர் ஜமான் 44 இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இங்கிலாந்துக்கெதிரான தொடரில், மூன்று போட்டிகளில் 126 ஓட்டங்களைப் பெற்ற கே.எல்.ராகுல் ஒன்பது இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More