பிரதான செய்திகள் விளையாட்டு

சந்திமால் – ஹத்துருசிங்க – குருசிங்க ஆகியோருக்கு தடை – அணித் தலைவராக சுரங்க லக்மால்


தினேஷ் சந்திமால், சந்திக ஹத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடுசபை தடை விதித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது, தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடுசபையினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை மூவரும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடுசபையின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து மூவருக்கும் அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap