148
சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசித்த வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சியராலியோன் நாட்டை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகளால், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (12.06.18) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love