Home இலக்கியம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு – 2018

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு – 2018

by admin

திருமதி வானதி பகீரதன்
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்
கிழக்குப்பல்கலைக் கழகம்

சர்வதேச ஆய்வு மாநாடு – 2018 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 – 18ம் திகதிகளில் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு உட்பட நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து பெருந்தொகையான ஆய்வாளர்களும,; புலமையாளர்களும,; பேராசிரியர்களும் பங்குபற்றவுள்ளனர்.

ஒரு பல்கலைக்கழக சமூகம் ஆய்வு மாநாடொன்றை நடத்தவதற்கான தேவை யாதெனில் தமது நிறுவனம் சார்ந்த கல்விச் சமூகத்தினரின் புலமை, திறன்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் புதிய துறைசார்ந்த விடயங்களையும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் பயனுறுதிமிக்க ஆய்வுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குமாகும். அந்த வகையிலேயே எமது நிறுவகத்தின் ஆய்வு மாநாட்டுக்கான அமர்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

எமது நிறுவகம் வெறுமனே ஒவ்வொரு ஆண்டும் ஓர் ஆய்வு மாநாட்டை நடாத்துவது என்ற நிலையிலிருந்து விலகி இம் மாநாட்டை நடத்துவதன் மூலம் புதிய பாடத்துறைகள் சார்ந்த புலமைகளை பல்கலைக்கழக சமூகம் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நடத்த முனைகின்றது.

எமது கலைத்திட்டத்தில் தற்போது பல புதிய பாடத்துறை சார்ந்த கற்கை நெறிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இக் கற்கை நெறிகளுக்கான பாடத்திட்டஙகள் வடிவமைக்கப்பட்;டு பூர்த்தியாகியுள்ளன. உள்ளுர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும், தமிழர் ஆடல் மரபுகள், தமிழர் இசைமரபுகள், தமிழர் இசைக்கருவி மரபுகள், தமிழர் அரங்க மரபுகள், தமிழர் அழகியலும் தத்துவமரபுகளும் போன்ற துறை சார்ந்த கற்கை நெறிகள் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இத் துறைகள் சார்ந்த பாடத்திட்ட வடிவமைப்பிற்கு துறைசார்ந்த வளவாளர்களாக பல்கலைக்கழகம் சார்ந்த பேராசிரியர்கள் பலரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கருத்துரைகள் கலந்துரையாடல்கள் ஆலோசனைகள் பெறப்பட்டன.

இத்தகைய நீண்ட நாட் செயற்பாடுகளின் பின்னரே பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. எனவே எமது நிறுவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படவிருக்கின்ற இப் பாடத்துறை சார்ந்த அறிவையும் புலமையையும் திறனையும் எமது கல்விப்புலம் சார்ந்தோர் மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே இத்துறைகள் சார்ந்த அமர்வுகளை எமது ஆய்வு மாநாட்டில் ஒழுங்கு படுத்தியுள்ளோம். இது நிறுவக விரிவுரையாளர்களைக் கட்டாயப்படுத்தி வற்புறுத்திக் கொடக்கப்பட்ட ஆய்வு விடயத் தலைப்புகளல்ல. அவர்கள் தாம் எத்துறை சார்ந்த கற்பித்தலில் ஈடுபட உள்ளார்களோ அத்துறைசார் விடய அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்வதற்கான, தேடலுக்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்குகின்ற களமாகவே உள்ளது.

ஆய்வு மாநாட்டீன் ஆதார சுருதி உரையை (மநலழெவந யனனசநளள) வழங்குவதற்காக வருகை தர இருப்பவர்;களின் விபரங்கள் வருமாறு.

1. கலாநிதி. பிரண்டாஈ.எப்.பெக் – இவர் ஒரு மானிடவியலாளரும், தமிழ்க் கலாசாரங்களைக் கற்றுத் தேர்ந்தவருமாவார். அவருடைய பட்ட ஆய்வின் தலைப்பு கொங்கு நாட்டின் பொதுமன அமைப்பு என்பதாகும். அவர் தனது பட்ட ஆய்வை கொங்கு நாட்டின் குடியானவர் சமூகம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். அவர் தென்னாசியா மற்றும் தமிழ் நாட்டைப் பற்றி வாழ் நாள் பூராகவும் ஆராய்ந்தவர.;

கலாநிதி. பெக்குக்;கு தென்னாசிய புராணவியல் பற்றி அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் நாட்டார் கதைகள் பற்றிய ஈடுபாடும் உண்டு. அவர் இந்தியத் தேவதைகள், மிருக உருவங்கள் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கதைகளில் விபரிக்கப்படும், திருவிழாக்களில் சித்தரிக்கப்படும் காவிய மாந்தர்கள் பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார்.

கனடா ரொரண்டே பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையின் இணைப் பேராசிரியராகவும் எல்லா மட்டங்களிலும் கதை சொல்லலை அறிமுகம் செய்யும் கில்டன் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். கடந்த மூன்று வருடத்தில் யு.எஸ் கனடா, தமிழ் நாடு, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்திடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார்.

தற்போது முனைவர் பிரெண்டா பேராசிரியர் வி.செல்வநாயகம் நினைவு விருதை மானிடவியல், நாட்டாரியல் துறைகளில் தனித்துவமான தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தியமைக்காகப் பெறவுள்ளார்.

அண்ணன்மார் கதை என்ற தமிழ் நாட்டார் காவியத்தை வெளியிட எட்டு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தமிழ் நாட்டார் இலக்கியத்திற்கு உலக அங்கிகாரம் கிடைத்துள்ளது. இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்பதும் தமிழ் பேசக் கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. கமினா குணரெட்ணடு.டு.டீ பட்டத்தைக் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் டு.டு.ஆ பட்டத்தை ஹர்வாட் சட்டப் பாடசாலையிலும் கலாநிதிப் பட்டத்தை நியூசிலாந்து வைகாடே பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவர் தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் சட்டத்துறைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் அப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கற்கைகள், மற்றும் சமூக விஞ்ஞானங்கள் துறைத் தலைவராகவும் இருந்தார்.

கமினா குணரெடணவின் ஆய்வு முயற்சிகள் சுற்றுச் சூழல் அபிவிருத்தி, மனித உரிமைகள், பால்நிலை சார்ந்தவைகளாகும். அவர் இலங்கையிலுள்ள பல பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பின் பின் மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சட்டம், மற்றும் மனித உரிமைகள் பற்றிக் கற்பித்து வருகிறார். பல்வேறு விடயங்களில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதோடு பெண்களின் கல்வியை கவனிக்கும் அவதானிப்பாளர் சபையிலும் பணியாற்றுகிறார். சுற்றுச் சூழல் சட்டம், மனித உரிமைகள், பெண்கள் பிரச்சினைகள், சட்டக்கல்வி போன்றவை தொடர்பிலான குழுக்களில் அங்கம் வகித்து வருகிறார். அவர் உலக வங்கித்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, சூழல் ஆய்வு, பயிற்சித் தகவலுக்கான மையம் என்பனவற்றுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் உள்ளார்.

பேராசிரியர் குணரெத்திண தனது ஆர்வத்திற்குரிய விடயங்கள் பற்றி நிறைய எழுதியுள்ளார். அவரது மரபுவழி வளம்,சமத்துவம் மற்றும் சர்வதேசச் சட்டம் என்ற நூல் 2012ல் வெளிவந்தது. அவர் பெண்கள் மற்றும் நில உரிமைகள், பெண் தொழிலாளர் உரிமைகள், பாலியல் வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம், சட்டக்கல்வி, புலமைத்துவம் பற்றி எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3. எலிசபெத் டீன் ஹெர்மானலண்ட் அவர்கள் ரொட்ஸ் ஐலன்ட் வடிவமைப்புப் பாடசாலையில் வடிவமைப்பு மற்றும் சமூக நீதி ஆகிய துறைகளில் பேராசிரியராக உள்ளார்; இவர் எமக்கு நன்கு பரீட்சையமான ஒருவர். எமது நிறுவகத்தின்; மாணவர்களக்கு பல பயிற்சிப் பட்டறைகளை ஏற்கனவே நடாத்தியவர்.
வடிவமைப்பு பாடசாலையில் (சுஐளுனு) வடிவமைப்ப மற்றும் சமூக நீதி ஆகிய துறைகளில் பேராசிரியராக உள்ளார். அவர் பட்டதாரிகளுக்கும், பட்டதாரி பயிலுனர்களுக்கும் நகரச் சூழல் மற்றும் பல்வகை வடிவமைப்புக்களை சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பேண்நிலை, மீண்டெழுதல் போன்றவற்றோடு தொடர்புபடுத்திக் கற்பித்து வருகின்றார். அக் கற்கைகளின் இணைப்பாளராகவும் கடமையாற்றுகிறார். 1990ன் இறுதியில் (சுஐளுனு) யின் நிலத்தோற்றம் கட்டடக்கலைத்துறை தலைவராகவும் இருந்துள்ளார்.

ஹெர்மான் வளம் குறைந்த, முரண்பாடு மற்றும் அனர்த்தத்துக்குப் பின் உள்ள சமூகங்களுக்கு உதவக்கூடிய உபாயங்களைப் பரிசோதிக்கும் ஆய்வு கூடம் (வுயுயுளுஐ) நிறுவனராகவும், இணை இயக்குனராகவும் உள்ளார்.

பிரௌன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கைகளுக்கான நிறுவனம், ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்பு, பாடசாலை வாஜிங்டன் பல்கலைக்கழகம் என்பனவற்றில் வருகைதரு பேராசிரியராக உள்ளார். பட்சன் கல்லூரியில் வருகைதரு புலமையாளராக இருக்கும் ஹார்மான் நகரத்திட்டமிடல் மற்றும் அது தொடர்பான கற்கைகளில் புலமை அங்கத்தினர் ஆகவும் உள்ளார். ஓர்கன் பல்கலைக்கழகத்தில் நகரவியல் பற்றிய ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள இவர் யு.எஸ் ராஜாங்கத் திணைக்களத்தில் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் ரோம், அமெரிக்க அக்கடமி ஆகியவற்றில் ஆலோசகராகவும் தொழிற்படுகிறார். பங்களாதேஷ், கிட்டகோங் நகரில் நிறுவப்பட்டுள்ள பெண்களுக்கான புதிய ஆசிய பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட திட்டமிடல் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். ரொரன்டோவில் உள்ள ஆகாகான் இஸ்லாமிய நூதன சாலையின் ஆலோசகராகவும் உள்ளார். ஹார்மன், பிரௌன் பல்கலைக்கழகம் நிறுவிய சமகால தென்னாசிய மையத்திற்கும் வாட்சன் நிறுவனத்தின் சர்வதேச ஆய்வுக்கும் துணை செய்கிறார்.

ஹார்மான் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்ற இவரின் ஆய்வுகள் கட்டிட நிர்மாணம், நகரமைப்பு, மருத்துவத்தின் வரலாறு மற்றும், மத்திய கிழக்குப் பற்றி இருந்தன. இவரது ஆய்வுகள் இரு வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றன. ஒரு வகை அமைப்பைச் சார்ந்த நோக்கை அடிப்படையாகக் கொண்டவை. பிரதானமாக வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளின் ஆட்சிப்பரப்புக்குள் செயல்படும் சூழல் சமூக அரசியல் சூழ்நிலைகளாலும் முரண்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் இடப்பெயர்வாலும் நகரங்களில் ஏற்படும் நெருக்கடிகள் பற்றியவை மற்றவகைப் படைப்புத் தன்மையின் இயல்பு, மற்றும் முரண்பாடு பற்றியவையாகவும் அவை முக்கியமாக நீண்ட காலப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீண்டெழும் ஆற்றலைப் பற்றியதாகும்.
ஹார்மன் ஒரு புல்பிறைட் புலமையாளராக இலங்கையில் தற்போது தனது ஆய்வு மற்றும் செயற்பாட்டுப் பணிகளைத் தொடர்கிறார். இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், எமது அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும் தனது பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

4. கலாநிதி. மரியாள் லுக்மன் (கலைஞர், வரலாற்றாசிரியர், மற்றும் ஆலோசகர் கட்புல தொழில்நுட்பத்துறை, சு.வி.அ.க.நி) அவர்கள் ‘பழைமையை நோக்கிச் செல்லல் சாகித் சஜாவும், சிட்டாக்கொங் மலைப்பகுதி பூர்வீகப்பழங்குடியினரும் 1996.’ என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.

இவர்களது உரைகள் எமது மண்சார்ந்த, வாய்மொழிமரபை அடிப்படையாகக் கொண்டமைந்த அண்ணன்மார் காவியக் கதைகளை அடியெற்றி எமது கலாசார முதுசங்களை மானிடவியல் நோக்கில் வெளிப்படுத்துவதாகவும் பெண்கள் உரிமைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வன்முறை தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சட்டம் எதிர்ப்பு அரசியல் மற்றும் கட்புலனாகாக் கலாசாரப் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றன. இவ்வுரைகள் யாவும் எமது ஆய்வு மாநாட்டுக்கான அடிப்படை மையக்கருவை அடியெற்றயதாகவே அமைந்துள்ளன. எனவே இவ்வுரைகள் மிகவும் அவசியமானவையும் பொருத்தமானவையும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இந் நால்வரில் ஒருவர் எமது நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பிற நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களை ஆதாரசுருதியுரையாற்ற அழைத்ததன் மூலம் எமது நிறுவகத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்தவரின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எமது நிறுவகம் நடாத்துவது தேசிய மாநாடு அல்ல. இது சர்வதேச ஆராய்ச்சி மாநாடாகும். எனவே ஆங்கிலத்தில் உரையாற்றுவதும் பொருத்தமானது என்றே கருதுகின்றோம். இவ்வுரைகளை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து சிறு சிறு நூல்களாகவும் வடிவமைத்துள்ளோம்.

மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான ஆய்வுச் சுருக்கங்களை அவ்வவ் ஆய்வு அமர்வுகளுக்குத் தலைமை தாங்கவுள்ள புலமையாளர்கள், பேராசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி அவை தொடர்பான அவர்களது கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டும் ஆய்வமர்வுக்குத் தலைமை தாங்கும் சில பேராசிரியர்கள் எமது நிறுவகத்திற்கு வருகைதந்து நேரடியாகவே ஆய்வுச் சுருக்கங்களை மதிப்பீடு செய்து அவை தொடர்பான ஏற்பு, விலக்கல்களைக் குறிப்பிட்டனர்.
இத்தகைய புலமையாளர்களின் கருத்துரைகள் கலந்துரையாடல்களே எமது ஆய்வு அமர்வுகளின் கனதியை அதிகரிக்கச் செய்தன. இதனடிப்படையிலேயே ஆய்வுச் சுருக்கங்கள் ஏற்கப்பட்டன இத்தகைய அணுகுமுறைகளின் அடிப்படையிலேயே எமது நிறுவகத்தின் ஆய்வு மாநாடு உருப்பெற்றுள்ளது.இம் மாநாட்டில் இருபத்துநான்கு அமர்வுகளில் நூற்று இருபத்து நான்கு ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. இவ் ஆய்வு அமர்வுகள் ஐந்து பகுதிகளாகப் ( pயநெடள) பகுக்கப்பட்டு நாளொன்றுக்கு இரண்டு அமர்வுகள் ஆறு இடங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது நிறுவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள பாடத்துறைகளுக்கான அமர்வுகளாக உள்ளுர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும், தமிழர் ஆடல் மரபுகள், தமிழர் இசைமரபுகள், தமிழர் இசைக்கருவி மரபுகள், தமிழர் அரங்க மரபுகள் போன்றவை அமைகின்றன. இவற்றை பட்டத்துறைசார்ந்த கற்கை நெறிகளாக முன்னெடுப்பதற்கான திட்ட வரைபுகள் ( pசழிழளயடள) மற்றும் பாடத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
‘உள்ளுர் உணவுப் பண்பாடுகளும் தத்துவங்களும்’:.

பாரம்பரிய உணவு என்பது மக்கள் தாம் வாழ்ந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு உதவிய உணவு வகைகளையே குறித்து நிற்கின்றது. இயற்கையில் கிடைத்ததும் எதுவித மரபணு மாற்றங்களுக்கும் இரசாயன நச்சுப் பதார்த்தங்களுக்கும் உட்படுத்தப்படாத ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே குறித்து நிற்கின்றது. உள்ளுர் உணவுப் பண்பாடு நீண்டகாலமாக மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த உணவுப் பழக்க வழக்க நடைமுறைகளைக் குறிப்பதாகும். அதாவது மக்கள் தாம் வாழும் நிலம் சார்ந்த அமைப்புகளுக்கேற்ப வாழ்விடம், சுற்றுச்சூழல், இயற்கைவளம் என்பவற்றின் அடிப்படையில் தமது உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளமையைக் குறிப்பதாகும். ஒவ்வொரு இனத்திற்கும் நிலம் சார்ந்த அடையாளங்கள் உள்ளன. அதாவது சமைக்கும் முறை, பரிமாறுதல், உண்ணும் விதம் என்பன சமூகக் குழுக்களுக்கேற்ப, இனக் குழுக்களுக்கேற்ப மாறுபட்டுக் காணப்படுகின்றன என்பதை சமூக மானிடவியலாளர்கள் சிறப்புறப் பதிவு செய்துள்ளனர்.

உணவுப் பண்பாட்டினை வாழும் பிரதேசம், மதம், சமூகக்குழுக்கள் என்பன தீர்மானிக்கின்றன எனக் கூறலாம். குழந்தைகளுக்கான உணவு, நோயாளர்களுக்கான உணவு, கர்பணித் தாய்மாருக்கான உணவு, பாலூட்டும் தாய்மாருக்கான உணவு, முதியோருக்கான உணவு என்ற அடிப்படையிலும் பருவகாலங்களுக்கு ஏற்ற உணவுகள், சூடு, குளிர் உணவுகள் என்றும் சைவ, அசைவ உணவுகள் என்றும் மருத்துவ குணம் நிறைந்த உணவுகள் என்றும் உணவு உண்ணும் முறைக்கு அமைய பருகுதல், உண்ணுதல், தின்னுதல், கொறித்தல், நக்குதல் உணவுகள் உணவுகள் எனவும் அறு சுவைகளின் அடிப்படையிலும் ஊட்டச் சத்துக்களின் அடிப்படையிலும் உண்ணும் நேர அடிப்படையிலும் (காலை, மதியம், இரவு) பாகுபடுத்தி நோக்கப்படுகின்றன.

இவ் வகைப்பாடுகளையே உணவுத் தத்துவங்கள் என வரையறை செய்ய முடியும். இவ் உணவுப் பழக்கங்களே எந்தநேரத்திற்கு எந்த உணவு நல்லது? எந்த உணவை உண்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன? அவ் ஊட்டச்சத்துக்களால் உடலுக்கு கிடைக்கும் நன்மை தீமைகள் என்ன? நாம் எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? ஏன் வயது அடிப்படையில் உணவுகளைப் பகுத்துக் கொள்கிறோம்? நோயாளர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கேற்றவை என ஏன் வேறுபடுத்துகின்றோம்? ஏன் உணவை இத்தகைய முறையில் உண்ண வேண்டும்? என்ற வினாக்களை கேட்கும் போது எமது உணவுப் பண்பாட்டுக்கான தத்துவார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்உணவுப் பண்பாடும் தத்துவங்களும் ஒவ்வோர் இனத்தினதும் சமூகத்தினதும் முக்கிய அடையாளங்களாக அமைகின்றன. இவ் அடையாளங்களைப் பேணுவதும் வளர்த்தெடுப்பதும் ஒவ்வொரு சமூகத்தினதும் கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் எமது பிரதேச மண்சார்ந்த மக்களின் பண்பாடு கலாச்சாரங்களை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றது. இச் செயற்பாட்டின் ஒரு அங்கமாக எமது நிறுவகத்தில் பல்கலைக்கழக கூட்டுறவு உணவுச் சாலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கூட்டுறவு உணவுச்சாலை என்பது சாதாரணமாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இயங்கி வரும் உணவுச் சாலைகளைப் போலன்றி அவை எமது சமூகத்தின் பாரம்பரிய உணவுகளையும் பண்பாடுகளையும் பிரதிபலிக்கும் வகையிலான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க முனைவதுடன் பல்கலைக்கழக சமூகத்தின் உடல் ஆரோக்கியத்தையும் வலிமையையும் மேம்படுத்தும் வகையிலான உணவுகளை தயார் செய்கின்றது.

இவ் உணவுச் சாலை உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் எந்தவிதமான மசாலாக்களையும் சுவையூட்டிகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து எமது உள்ளுர் உணவுகளுக்கே முதன்மையளிக்கிறது. தேவையற்ற கொழுப்புணவுகளை தவிர்ப்பதுடன் சுவையும் ஆரோக்கியமும் உடைய எமது பாரம்பரிய உணவுகளை தயாரித்து அளிப்பதுடன் அதனை மாணவர்கள் விரும்பி உண்ணும் உணவுப் பழக்க முறைகளையும் நடைமுறைப்படுத்த முனைகின்றது.

இவ் உணவுச் சாலையில் சமையல் வேலை புரிபவர்கள் தமது வீடுகளில் குடும்பத் தலைவிகளாக இருந்த வயதும் அனுபவமும் மிக்க பெண்களாவர். இவ் உணவுச்சாலை மூலம் வெறுமனே வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்கள் பல்கலைக்கழக சமூகத்தினருடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதுடன் தமது சுய தொழில் வருமானத்தையும் ஈட்டிக் கொள்கின்றனர். பெரும்பாலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சார்ந்த பெண்களாகவே இவர்கள் இருப்பதால் இத் தொழில் மூலம் தமது வருமானத்தையும் ஈட்டிக் கொள்கின்றனர்.

இவ் உணவுச் சாலையில் எமது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களும் பாரம்பரிய உள்ளுர் முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தயார் செய்து கொண்டு வந்து அவற்றைப் பொதி செய்து விற்பனை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றது. எமது பல்கலைக்கழக மாணவர்கள் பின்னேர சிற்றுண்டிக்காக வெளியே அலைந்து திரியாமல் எமது பல்கலைக்கழக வளாகத்திலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக சமூகத்தில் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து எமது பாரம்பரிய உணவாகிய அப்பம் முதலானவற்றை உண்ணப் பழகிக் கொண்டுள்ளனர். எமது வளாகத்திலேயே கிராமத்துப் பெண்களின் மேற்சட்டி, கீழ்ச்சட்டி வைத்துச் சுடும் பாரம்பரிய உணவான அப்பத்தைச் சுடச்சுட வாங்கி உண்ணும் சந்தர்ப்பம் பல்கலைக் கழக வளாகத்திலேயே மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாலை நேரங்களில் கலை சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் தமது துறைசார்ந்த பயிற்சி நிறைவின் பின் இவ் ‘அப்பத்தை’ விருப்புடன் உண்பதைக் காண முடிகின்றது. இவ் உணவுச் சாலையினை மேற்பார்வை செய்யவும் ஆலோசனைகளை வழங்கவும் சிரேஸ்ட விரிவுரையாளர்களும் நிர்வாக உத்தியோகஸ்தர்களும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாள்தோறும் இவ் உணவுச் சாலைக்குச் சென்று மேற்பார்வை செய்வதுடன் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவ் உணவுச் சாலையில் நலனோம்புனர்களாகவும் வளவாளர்களாகவும் இவர்கள் செய்படுகின்றனர்.

பல்கலைக்கழகம் மாணவர்களின் நலனோம்பு நடவடிக்கைகளுக்காக இவ் உணவுச் சாலைக்கு சமையல் வாயு, மற்றும் சமையல் உபகரணங்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு குறைந்த செலவிலான உணவைப் பெற்றுக் கௌ;ள வழிவகை செய்து கொடுத்துள்ளது. இவ் உணவுச்சாலையில் தரமானதும் சுவையானதும் சுகாதாரமானதுமான உணவுகளைப் பெற முடிவதுடன் பல்கலைக்கழகம் வாழ்வாதாரமற்ற பெண்கள் சமூகத்திற்கு சுய தொழில் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்கின்றது.

எமது நிறுவகத்தின் முன்மாதிரியான உணவுச்சாலையாக இவ் உணவுச் சாலையை விரிவுபடுத்துவதன் மூலம் இதனை கற்றலுக்கான ஒரு செயன்முறைப் பயிற்சி நிலையமாகவும் வடிவமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

‘உள்ளுர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும்’ என்ற துறைசார்ந்த இளமாணிப் பட்டத்திற்கான கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பயிற்சிகளையும் அனுபவங்களையும் பெற்றக் கொள்வதற்காக முதலில் இதனை மூன்று மாதங்களுக்கான சான்றிதழ்க் கற்கை நெறியாக ஆரம்பித்து அதன் பின்னர் ஒரு வருட கால டிப்ளோமா கற்;கை நெறியாக விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக் கற்கை நெறிக்கான செயன்முறைப் பயிற்சிகளை வழங்கும் செயற்பாட்டு நிலையமாக இவ் உணவுச்சாலை விளங்கும்.

க.பொ.த உயர்தரக் கற்கைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களில் ‘மனைப் பொருளியலை’ ஒரு பாடமாகக் கற்பவர்களுக்கு அத் துறையில் பல்கலைக்கழகம் சென்று கற்பதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு எனலாம். மிகக் குறைந்த தொகையான மாணவர்களே இத்துறை சார்ந்து கல்வியியற் கல்லூரிகளுக்கும் அனுமதிக்கப்படுகின்றனர். கல்விப் பொது தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தில் இத் துறை சார்ந்த பாடத்தை கற்றவர்கள் இச் சான்றிதழ்க் கற்கைக்காக விண்ணப்பிக்க முடிவதுடன் அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் வந்து பல்கலைக்கழக சமூகம் சார்ந்த அறிவையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இச் சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்யும் மாணவர்கள் உள்ளுர் உணவுப் பண்பாட்டையும் அதன் உள்ளார்ந்த தத்துவங்களையும் அறிந்து கொள்வதுடன் தம்மை சிறந்த இல்லத் தலைவிகளாகவும் ஆக்கிக் கொள்ள முடிவதுடன் சுய தொழில் வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மனை அலங்காரம், மணப்பெண் அலங்காரம், பண்டிகைக்கால உணவு விற்பனை, பிறந்தநாள் மற்றும் திருமண வைபவங்களுக்கான அலங்காரக் கேக் வகைகள், திருமண மற்றும் சுவாமி அலங்கார மாலைகள் நவநாகரிகத்திற்கேற்ற ஆடைகளை தயார் செய்தல், குழந்தை பராமரிப்பு நிலையங்களை ஆரம்பித்தல், தனியார் மற்றும் அரச துறை சார்ந்த சிறுகைத்தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதுடன் அப் பயிற்சி நெறிகளுக்கான வளவாளர்களாகவும் செயற்பட முடியும்.

வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்லும் பெண்கள் இத்தகைய டிப்ளோமாப் பயிற்சிகளை பெற்றுக் கொண்டு செல்வதன் மூலம் சிறந்த ஊழியர்களாகவும் தொழில்தகமை மிக்கவர்களாகவும் உயர் சம்பளம் பெறத்தக்கவர்களாகவும் உருவாக வாய்ப்பு ஏற்படுகின்றது.

இச்; சான்றிதழ் கற்கை நெறியைப் பயின்றவர்கள் மேற்குலக நாடுகளிற்குச் செல்லும் போது அங்கு சிறந்த முறையில் சுயதொழில் வாய்ப்பினை மேம்படுத்திக் கொள்ள முடியும். தையற்கலை மற்றும் சமையல், கேக் அலங்காரம் கற்ற பெண்கள் மேலைத்தேய நாடுகளில் அதிக வருமானம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது.
‘உள்ளுர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும்’ என்ற துறை சார்ந்த இளமாணிப் பட்டத்திற்கான புதிய கற்கை நெறியை ஆரம்பிப்பதன் மூலம் உயர்தரத்தில் மனைப் பொருளியல் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு அவர்களும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று இத்துறை சார்ந்து பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற முடிகின்றது.

இக் கற்றையைப் பூர்த்தி செய்யும் பட்டதாரி மாணவர்கள் இத்துறை சார்ந்த பட்டதாரி ஆசிரியர் நியமனங்களைப் பெற முடிவதுடன் கல்வியியற் கல்லூரி, ஆசிரிய பயிற்சி கலாசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளர் பதவிகளையும்; பெற்றுக் கொள்ள முடியும்.

எமது உள்ளுர்ப் பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் என்பன மறைந்து போய் எமது உணவுப் பழக்கத்திற்கான அடையாளங்களையே நாம் இழந்து மேலைத்தேச உணவு வகைகளுக்கும் பானங்களுக்கும் அடிமையாகிப் போயுள்ளோம். எமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் எமது உணவு முறைகளை எமது வருங்கால சந்ததியினருக்கு நாம் கையளிப்பதன் மூலம் எமது உள்ளுர் உணவுக் கலாச்சாரத்தைப் பேண முடியும்.

எமது பண்டைய உணவுப் பழக்கமானது தலைமுறை தலைமுறையாக கையளிப்புப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. உணவு தயாரிக்கும் முறை, உண்ணும் விதம், உணவு வகைகள் யாவற்றையும் தாயிடமிருந்து மகள் பெற்றுக் கொள்வதைக் காண முடிகிறது. எனவே ‘உள்ளுர் உணவுப் பண்பாடும் தத்துவங்களும்’ என்ற பட்டத்துறைசார் கற்கையை பயிலும் மாணவர்கள் மூலம் எமது பண்பாடு கலாச்சாரத்தைப் பேணும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுக் கையளிப்பு முறையினை வருங்கால சந்ததியினருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் அறிவும் பண்பாட்டு உணர்வும் ஆரோக்கியமும் உள்ள நற் பிரஜைகளை உருவாக்க முடியும்

நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்;ச்சி கலாச்சாரத் தொடர்புகள் இயந்திரமயமாக்கல் என்பவற்றால் பதப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கங்களுக்கும் பிற கலாச்சார உணவுகளுக்கும் மக்கள் பழக்கப்பட்டு விட்டனர். இதனால் எமது பாரம்பரிய உணவுகள் நீக்கப்பட்டு அவை இயற்கை நிலையிலிருந்து மாற்றப்பட்டு விட்டன. இது தற்போது மக்களின் ஆரோக்கியத்தில் பெருந்தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன. உணவு உற்பத்தி நிறுவனங்கள் தமது உற்பத்திகளை விற்பதற்காக கையாளும் தந்திரோபாயங்களாலும் சந்தைப்படுத்தல் உத்திகளாலும் மக்கள் அவ் உணவுகளால் கவரப்பட்டு அவ் உணவுகளை விரும்பத் தொடங்கி விட்டனர். பதப்படுத்தப்பட்ட உடனடி உணவுகளாலும் செயற்கைச் சுவையூட்டிகள் நிறமூட்டிகளாலும் எமது உடலின் ஆரோக்கியம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

எமது உடலுக்கு தேவையான உணவு எது என்பதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளாமல் சுவையான உணவு எது என்பதையே தேடி உண்ணப் பழக்கப்பட்டு விட்டோம். எமது பெரருத்தமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால் நாம் பல்வேறு தொற்றா நேய்களுக்கு இடங்கொடுத்துள்ளோம். இத்தகைய எமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கவழக்க முறைகளைக் கைவிட்டு உடல் ஆரோக்கியம் பேணும் எமது பண்பாட்டு உணவுகளை எமது வருங்கால சந்ததியினருக்கு வழங்குவது பல்கலைக்கழகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடாகும். எனவே இப் பாடத்துறையினை அறிமுகம் செய்வதன் மூலம் இக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்யும் பட்டதாரிகள் எமது பாரம்பரிய உணவுப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பதோடு நோயற்ற, ஆரோக்கியமான சந்ததியினரை எதிர்கால உலகுக்கு அளிக்க முடியும்.
எமது உள்ளுர் உணவுப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கிலான இச் செயற்பாட்டின் ஓர் அங்கமாகவே இச் சர்வதேச ஆய்வுமாநாட்டில் ‘உள்ளுர் உணவுப்பண்பாடும் தத்துவங்களும்’ என்ற பொருண்மையிலான ஆய்வமர்வு நடத்தப்படவுள்ளது. இது வெறுமனே மாநாட்டை நடாத்தி முடிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட அமர்வாக அமையாது அவை நீண்ட நாட் செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட்ட கருத்துரைகள், கலந்துரையாடல்கள் மூலமும் புலமையாளர்கள், பேராசிரியர்கள், பல்துறைசார்ந்த ஆளுமைகளின் ஆலோசனைகளுடன் கூடியதாகவும் பாடத்திட்ட வடிவமைப்பிற்கு வளம் சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. நிறுவகப் பணிப்பாளா, விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகஸ்தர்களின் அயராத முயற்சியினால் இதனை பட்டப்படிப்pற்கான கற்கை நெறியாக அறிமுகம் செய்வதற்கான திட்ட வரைபுகள் ( Proposal)  பூர்த்தியாகியுள்ளன.

இந் நிலையிலேயே ‘உள்ளுர்; உணவுப் பண்பாடும் தத்துவங்களும்’என்ற அமர்வின் தேவைப்பாடும் அவசியமாகின்றது. இவ் அமர்வில் பல்வேறு சமூகத்தினரதும் பாரம்பரிய உணவுகள் பலவும் கிராமிய மணங்கமளும் தயாரிப்புக்களும் காட்சிப்படுத்தப் படுவதோடு விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமதி வானதி பகீரதன்
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்
கிழக்குப்பல்கலைக் கழகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More