Home இலங்கை போதை மன்னர்கள் வெலே சுதா – சூசை – வெலிகடை சிறைச்சாலையின் வை.ஓ சிறைக்கு மாற்றம்?

போதை மன்னர்கள் வெலே சுதா – சூசை – வெலிகடை சிறைச்சாலையின் வை.ஓ சிறைக்கு மாற்றம்?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


ஹெரோயின் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா மற்றும் சூசை ஆகியோரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெலிகடை சிறைச்சாலையின் வை.ஓ சிறைக்கு மாற்ற சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் வெலே சுதா, இதுவரை வெலிகடை சிறைச்சாலையின் செப்பல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் சூசை எல்.பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

காவற்துறை போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றி பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலை, சிறைக்குள் இருந்தவாறு சூசை என்ற நபரே வழிநடத்தியுள்ளார்.

இதனையடுத்து வெலிகடை சிறைச்சாலையில் எல்.பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூசை, வெலே சுதா தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செப்பல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், அவர்கள் இருவரும் வை.ஓ பிரிவுக்கு கடந்த 11 ஆம் இரவு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை வெலிகடை சிறைச்சாலையில் வை.ஓ. பிரிவில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கடத்தல்காரரான மொஹமட் சித்திக் கடந்த 11 ஆம் திகதி இரவே மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More