Home உலகம் கெயிட்டி பிரதமர் பதவிவிலகல்

கெயிட்டி பிரதமர் பதவிவிலகல்

by admin


கெயிட்டியின் பிரதமர் ஜக் கய் லபோன்ரன்ற் (Jack Guy Lafontant )பதவி விலகியுள்ளார். கெயிட்டியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக வன்முறை போராட்டங்களை இடம்பெற்று வருகின்றதனையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.

அங்கு அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களையடுத்து ஆளும் கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் உரையாற்றிய பிரதமர் பதவிவிலகல் குறித்து அறிவித்துள்ளார்.

மேலும் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைக்கேல் ஜோசப் மார்டெல்லி ( Michel Joseph Martelly ) ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More