ரஷ்யாவில் இடம்பெற்றுவந்த 21ஆவது கால்பந்தாந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் குரோஷியாவை வென்று 20ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் சம்பியனானது. நேற்றையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதற்பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் காணப்பட்டது.
தொடர்ந்த இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல்களும் குரோசியா ஒரு கோலும் போட்டநிலையில் இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ், தனது இரண்டாவது உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது
இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரில் ஆறு கோல்களைப் பெற்று இங்கிலாந்து அணியின் தலைவரும் முன்கள வீரருமான ஹரி கேன், உலகக் கிண்ணத் தொடரில் அதிக கோல்களைப் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தங்கப் பாதணி விருதை வென்றுள்ளார்.
.