187
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் ஒரு கெட்அப் சமூக வலைத்தளங்களில் ரசியர்களால் ஆர்வத்துடன் பகிரப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு பெண் வேடத்திலும் அவரது கன்னத்தை ஒருவர் கிள்ளுகிறார். அந்த நபர் யார் என்று கண்டுபிடிங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்கார் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்துடன் இந்த படத்தில் விஜயிற்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வீடியோ இணைப்பு
Spread the love