Home இலங்கைபோதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்டனை – ரணில் தயக்கம்…

போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்டனை – ரணில் தயக்கம்…

by admin

போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்கும் சட்­டத்தை அமு­லுக்கு கொண்டு வரு­வதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் வெளியிட்டுள்ளார்.

மரண தண்டனைச் சட்டம் அமு­லுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலு­கைக்கு பாதிப்பு ஏற்­படும் என்பதால்  இது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்­னரே இறுதி முடி­வுக்கு வர வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் நேற்று தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் கூடி­யது. இந்த கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் முன்­ன­ணியின் பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்து கொண்­டனர். இந்த கூட்­டத்தின் போது இவ்­வா­ரத்­திற்­கான பாரா­ளு­மன்ற அலு­வல்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளன.

 குறிப்­பாக நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையின் செய்தி குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் கொண்டு வர­வுள்ள சபை ஒத்­தி­வைப்பு வேளை மீதான விவா­தத்­திற்கு தயா­ரா­கு­வது,  சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை ஒப்­பந்த தொடர்­பாக விவா­தத்­திற்கு தயா­ரா­கு­வது உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

 இதன்­போது ஐக்­கிய தேசி­ய ­கட்­சியின் தொழிற்சங்க செய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான அஜித் பீ பெரேரா எழுந்து நாட்டில் மரண தண்­ட­னையை அமுலுக்கு  கொண்டு வரு­வது தொடர்பில் பிர­த­மரின் நிலைப்­பாட்டை வின­விய போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவினால்   இந்த தயக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More