161
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பிலான ஆவணங்களில் பிரச்சினைகள் காணப்படுவதாக விசாரணை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான தகவல்களை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை வழங்கியிருந்தது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய சிக்சை தொடர்பான ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளமை விசாரணை ஆணையத்திற்கு தெரிய வந்துள்ளது. அத்துடன் அவசரமாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் ஆவண பாதுகாவலரை விசாரிக்க ஆணைக் குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love