302
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா 17.07.2018 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நலன்புரிச் சங்கத் தலைவர் கணக்காளர் கில்பேட் குணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆடிப்பிறப்புக் குறித்த சிறப்புரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஆடிப்பிறப்பு
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இன்று(17-07-2018)பகல் சிறப்பாக நடையெற்றுள்ளது. ஆடிப்பிறப்பு. தமிழரின் பண்பாட்டுத் திரு நாள்களில் ஒன்றாகும் அதில் ஆடிப்பிறப்பிற்கென்று தனியானதோர் இடமுண்டு.ஆடி மாதத்தின் முதல் நாளிலே ஆடிப்பிறப்பு கடைப்பிடிக்கப்படுகின்றது.
இவ்ஆடிப்பிறப்பு நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றுறம் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்ஆடிப்பிறப்பு நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றுறம் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Spread the love