184
பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டே நீதிமன்றம் இன்றைய தினம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. இரண்டு பேரினதும் விளக்க மறியல் காலத்தினை எதிர்வரும் 02ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் அண்மையில் குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love