குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 யூன் மாதம்; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஐந்து இலட்சத்து முப்பத்திரண்டாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஒன்று சதுரமீற்றர் பரப்பளவில் ((532,391SQM) இருந்து ஐந்தாயிரத்து நானூற்று நாற்பத்திரண்டு (5442) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
தொடாந்து இந்நிறுவனம் துரிதகதியில்; கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் முன்னெடுத்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.