Home இந்தியா அமெரிக்கா – இந்தியா உயர்மட்டப் பேச்சுவார்த்தை செப்டம்பரில்

அமெரிக்கா – இந்தியா உயர்மட்டப் பேச்சுவார்த்தை செப்டம்பரில்

by admin


அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை அமெரிக்காவுக்கு சென்றபோது இரு நாடுகள் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 6-ம் திகதி இருநாடுகளுக்குமிடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கெல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மத்தீஸ் ஆகியோர் இந்தப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த சந்திப்பை அமெரிக்கா காரணம் எதுவும் தெரிவிக்காமல் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தியா – அமெரிக்கா இடையிலான இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது, உலகளாவிய மற்றும் பிராந்திய நிலவரம் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More