காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையகம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். காவிரி நீர் பங்கீட்டு வழக்கு தொடர்பில் உச்சநீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தநிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு பகுதியை கேரளா அரசின் குத்தியாடி திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கவும் கோரி கேரளா அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த சீராய்வு மனுவினை நேற்றையதினம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் பரிசீலனைக்கு எடுத்து விசாரித்தனர். இதன்போது ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையகம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி குறித்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.