மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ள நிலையில் கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்தநிலையில், நேற்று மாலை வரையான நலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்தமையினால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை 14-வது நாளாகவும் நீடித்தது. மேலும் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது என்பதால், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை இன்று திங்கட்கிழமை அடைந்து விடும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்தநிலையில் அங்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது