Home உலகம்கணவருடன் நடப்பதும்,  ரசனையோடு சமைப்பதும், தொலைக்காட்சி தொடர் பார்ப்பதும் பிடிக்கும்…

கணவருடன் நடப்பதும்,  ரசனையோடு சமைப்பதும், தொலைக்காட்சி தொடர் பார்ப்பதும் பிடிக்கும்…

by admin

ஐரோப்பிய ஒன்றியத்தில்  இருந்து விலகும் பிரித்தானியா ‘பிரெக்சிற்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘பதட்டமான’ பதவியை வகிக்கும் பிரதமர் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார். ஐரோப்பிய  ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரித்தானியாவின்  பெரும்பான்மையான மக்கள் வாக்களித்த பின்னர், அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

‘பிரெக்சிற்’  தொடர்பான அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும்  நிலையில், தனது முடிவுகளை ஆதரிக்காவிட்டால் ஒருநாளும் பிரெக்சிட் நிறைவேறாது. குறுகிய காலத்தில் பாராளுமன்ற தேர்தலை நீங்கள் சந்திக்க நேரிடும் என தெரசா மே எச்சரித்ததனை அடுத்து எதிர்ப்புக்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகில் மிகவும் ‘டென்ஷனான’ பிரதமர் பதவியை வகிக்கும் நீங்கள் உங்கள் மன உளைச்சல்களில் இருந்து எப்படி ஆசுவாசப்படுத்தி கொள்கிறீர்கள் என்னும் கேள்விக்கு தெரசா மே பதிலளித்துள்ளார்.

பிரித்தானியாவின்  வடக்கே நியூகாஸல் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு சென்ற தெரசா மேவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு , ‘ஓய்வு மற்றும் விடுமுறை நேரங்களில் எனது கணவருடன் சேர்ந்து நடக்கப் பிடிக்கும். நாம் சாப்பிடும் பொருளை நாமே சமைப்பது என்ற வகையில் சமையலில் மிகவும் ரசனையோடு ஈடுபடுவேன். நல்ல சமையல் குறிப்புகளுடன் கூடிய சுமார் 150 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. அதேபோல், போலீஸ் வாழ்க்கையை மையமாக வைத்து அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்.சி.ஐ.எஸ். தொடரை பார்ப்பதும் எனக்குப் பிடிக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More