Home இலங்கையாழ் மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவி….

யாழ் மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவி….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


யாழ் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்,  யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் மற்றும் மாவட்டத்தின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் என்பன குறித்தும் ஆராயப்பட்டது.

இதற்கமைய மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகள் 2255 பேருக்கு மாத்திரமே தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் இன்னமும் 5200 பேருக்கு உதவித் தொகை வழங்க வேண்டியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆகவே மாற்று திறனாளிகளாக இருக்கின்றவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் மற்றும் தேவைகளைக் கருத்திற் கொண்டு அவர்கள் அனைவருக்குமான உதவித் தொகைகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டது.

அந்த உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இணைத்தலைவர்களாலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More