166
சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா நட்சத்திர விடுதியில் தற்போது நடைபெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர். இந் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஆகியோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். தொடர்ந்து முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸவும் சம்பந்தனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்திருந்தார்.
Spread the love