13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து வீரர் மோஸ்தபா அசல் மற்றும் வீராங்கனை ரோவன் ரெடா ஆகியோர் அராபி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளனர். சென்னையில் நடந்து வரும் இந்தப் போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எகிப்தின் மோஸ்தபா அசல் 11-7, 13-11, 11-4 என்ற நேர்செட்டில் நடப்பு சம்பியனான சகநாட்டு வீரரான மார்வன் டாரெக்கை வென்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
அதேபோன்று பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் எகிப்தின் நடப்பு சம்பியன் ரோவன் ரெடா அராபி 11-4, 11-9, 10-12, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஹனியா எல் ஹம்மாமியை வென்று மீண்டும் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.