Home இலங்கைவிஜயகலா மீதான ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை, ஐ தே கவின் செயற்குழுவில்…

விஜயகலா மீதான ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை, ஐ தே கவின் செயற்குழுவில்…

by admin


முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை இன்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளது. இதனை ஐ.தே.கட்சியின் பொது செயலாளருமான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்புகளிடம் இருந்து வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சியினால் விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவிடம் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்திருந்த எழுத்துமூல விளக்கமளிப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More