Home பிரதான செய்திகள் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியல் வெளியீடு

சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியல் வெளியீடு

by admin


உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அண்மையில்; நடைபெற்று முடிவடைந்த உலககிண்ண கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வென்று கிண்ணத்தினைக் கைப்பற்றியிருந்தது. .

இதனைத் தொடர்ந்து உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வழங்குவதற்கான முதல்கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் 10 வீரர்கள் இடம் பெற்று உள்ள நிலையில் கிண்ணத்தினைக் கைப்பற்றிய பிரான்ஸ் அணியின் எம்பாப்பே, கிரிஸ்மன் மற்றும் ரபெல் வரனே ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளன்ர்.

அதேவேளை உலக கோப்பையில் 6 கோல்களை அடித்து விருது பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹரிகேனுடன் லயனல் மெஸ்சி, கிறிஸ்டினோ ரொனால்டோ ஆகியோரும் பெல்ஜியம் அணியின் ஈடன் ஹசாட், கெவின் டிபுருயன் ஆகியோரும் குரோஷியாவின் மோட்ரிச்சும் இந்தப்பட்டியிலில் உள்ளனர்.எனினும் பிறேசிலின் நெய்மர் இந்தப்பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More