Home இலங்கை“நான்பட்ட வலியை தற்போது அனந்தி உணர்ந்திருப்பார்”

“நான்பட்ட வலியை தற்போது அனந்தி உணர்ந்திருப்பார்”

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதற்கு காரணமாக இருந்த அமைச்சர் அனந்தி மீது இன்று குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது நான்பட்ட வலியை உணர்ந்திருப்பார். என மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாணசபை யின் 128வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அமைச்சர் அனந்தி சசிதரனின் ஆயுத விவகாரம் தொடர்பாக பேசப்படும்போதே சத்தியலிங்கம் அவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சராக இருந்த நான் அந்த அமைச்சு பதவியிலிருந்து விலகும்போது சுகாதார அமைச்சிலிருந்து கோவைகளை எடுத்து சென்றதாக பொய்யான குற்றச்சாட்டு ஒன்றினை முதலமைச்சருக்கு கூறியவர் அமைச்சர்  அனந்தி சசிதரனே. இன்று அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றது.

இங்கே அவர் மன வருத்தத்துடன் பேசுகிறார். அவருடைய மனவேதனையை நான் அறிந்து கொள்கிறேன். ஆனாலும் எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியபோது  அதனால் நான்பட்ட வலியை அமைச்சர் அனந்தி இப்போது உணர்ந்திருப்பார். உணரவேண்டும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More