Home உலகம்கிரிக்கெட்டில் தலைவனாக எடுத்த துணிகர முடிவுகளை நாட்டின் பிரதமராக எடுக்க வேண்டும்

கிரிக்கெட்டில் தலைவனாக எடுத்த துணிகர முடிவுகளை நாட்டின் பிரதமராக எடுக்க வேண்டும்

by admin

கிரிக்கெட் அணியின் தலைவனாக இருந்தபோது செய்ததுபோல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என முன்னாள் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவருமான அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவர் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ள அசாருதீன் இம்ரான் கான் முட்கள் நிறைந்த கரடுமுரடனான பாதையை கடந்து வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக அவர் எடுத்த முடிவுகள் மிகவும் துணிச்சலாகவும், தனித்தன்மை கொண்டதாகவும், சாதகமானதாகவும் அமைந்திருந்தது. அதேபோன்று அவரது நாட்டின் பிரதமரான பின்னரும் எடுக்க வேண்டும்.

ஆனால், ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதும் ஒரு நாட்டை தலைமையேற்று வழிநடத்துவதும் முற்றிலுமாக இரு வேறுபட்ட விவகாரம் என்பதால் இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அசாருதின் தெரிவித்துள்ளார்

இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றால் இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் சாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அசாருதீன், ‘ஒரு கிரிக்கெட் வீரர் ஆட்சியை பிடிப்பது மிகவும் அரிதான காரியம். முதல்கட்டமாக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை அவர் தீர்க்க வேண்டியுள்ளது, அதன் பிறகுதான் மற்ற பிரச்சனைகள் தொடர்பாக அவர் திரும்பிப் பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More