Home இலங்கைசாவகச்சேரி வர்த்தக நிலையத்தினுள் புகுந்த வாள் வெட்டுக் குழுவினர் அட்டகாசம்…

சாவகச்சேரி வர்த்தக நிலையத்தினுள் புகுந்த வாள் வெட்டுக் குழுவினர் அட்டகாசம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் உள்நுழைந்த வாள் வெட்டு குழுவினர் வர்த்தக நிலைய உரிமையாளரை வாளினால் வெட்டி உள்ளனர். சாவகச்சேரி கைதடி வடக்கில் வர்த்தக நிலையத்தினுள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகுந்த கும்பல் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அத்துடன் அங்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நின்றவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.

எட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற கும்பல் ஒன்றே அப்பகுதிகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் காவற்துறை அவசர சேவை பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் காவற்துறையினர் செல்வதற்கு முன்னர் கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More