Home இலங்கைவிவசாயிகளின் உற்பத்தி திறன்களை மேம்படுத்த, விளைதிறனை வழங்கும் விதைகள் விரைவில் அறிமுகம்…

விவசாயிகளின் உற்பத்தி திறன்களை மேம்படுத்த, விளைதிறனை வழங்கும் விதைகள் விரைவில் அறிமுகம்…

by admin

விவசாயிகளின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதன் நோக்கம் கருதிய களப் பயணமாக, இரணைமடுவில் அமைந்துள்ள பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி திணைக்களத்திற்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் சென்றுள்ளார்.

குறிப்பாக ஆராய்ச்சியாளர்களினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட மா,நிலக்கடலை,வெங்காயம்,போன்ற விதைகள், விளைதிறனை வழங்குவதோடு விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கும் என எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, விவசாயிகளுக்கு வெகுவிரைவில் அறிமுகம் செய்து, வழங்கப்பட உள்ளதாகவும் ஆராய்ச்சி அதிகாரிகளினால் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட ரீதியில் விவசாயிகளினால் பிரதேச ரீதியாக மண்வள தன்மை குறித்த கருத்தை விவசாயிகள் பிரதி அமைச்சருக்கு குறிப்பிட்டிருந்தனர். இந்த விடையம் தொடர்பாக அதிகாரிகளின் நடவடிக்கை குறித்தும் அவ்வாறான பிரைச்சனைகளுக்கு எவ்வாறான அனுமானங்களை ஏற்படுத்தலாம் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கேட்டறிந்திருந்தார்.அதன் போது அதிகாரிகள் சார்பாக அவ்வாறான பிரைச்சினைகள் காணப்படுவதாகவும் பிரதேச ரீதியாக மண் பகுப்பாய்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை தொடர்பாக மேலதிகமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் விவசாய பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More