குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கரிற்ராஸ்-இலங்கை யின் 50 வது ஆண்டு நிறைவு பொன்விழாவினை முன்னிட்டு கரிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் சமாதான பேரணியும் கண்காட்சி நிகழ்வும் இன்று (28) முருங்கனில் மிகவும் சிறப்பான முறையில் இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (28) காலை 9.00 மணியளவில் முருங்கன் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வுகளை கரிற்ராஸ் -வாழ்வுதயத்தின் இயக்குனார் அருட்தந்தை அன்ரன் அடிகளார் நெறிப்படுத்தியதோடு குறித்த பேரணியை முருங்கன் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்து வைத்தார். இப் பேரணியின் தொடக்கத்தில் சர்வ மத வழிபாடுகள் சர்வ மத தலைவர்களால் நடாத்தப்பட்டதுடன் முருங்கன் பேருந்து தரிப்பிட நிலையத்திற்கு அருகாமையில்
சமாதானம் நல்லிணக்கத்திற்கு அடையாளமாக பொறிக்கப்பட்ட சமாதான நினைவுப் பலகையினை இன் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மன்னார் அரசாங்க அதிபார் மோகன்ராஸ் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.
பின்னார் பேரணி பஸ்தாரிப்பு நிலையத்திலிருந்து முருங்கன் மகாவித்தியாலய வளாகத்தை சென்றடைந்தது. அங்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு தமிழ் பாரம்பாரிய இன்னிய வாத்தியத்துடனும் சிங்கள பாரம் பாரிய கண்டி நடன அணி வகுப்புடனும் பாடசாலை வளாக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடார்ந்து பிரதம அதிதி அவார்களும் கரிற்ராஸ் -இலங்கை தேசிய நிலையத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் அருட்சகோதரர் துசாறியும் இணைந்து மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட சமாதான தீபத்தினை ஏற்றி வைத்தார்கள்.
தொடர்ந்து மன்னார் கரிற்ராஸ் -வாழ்வுதய இயக்குனார் அருட்பணி அன்ரன் அடிகளார்னால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டதுடன் நிகழ்வுகள் தொடார்ந்து இடம் பெற்றன.
குறித்த நிகழ்வில் அனுராத புரம் மறைமாவட்ட கரிற்ராஸ் -செத்சவிய ஸ்தாபனமும் இணைந்து கொண்டடியதுடன், சுமார் 1200 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தார்கள். அனுராத புரத்திலிருந்து 300 ற்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.