152
தன்னுடைய ஆட்சிகாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய கட்டடங்களிலிருந்து, தன்னுடைய பெயரை நீக்குவதற்கு, அரசாங்கம் முயற்சித்து வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்துக்கு தன்னுடைய பெயரே ஒரு பிரச்சினையாக உள்ளது என்றும் காலியிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலுள்ள என்னுடைய பெயரை எடுப்பது என்னுடைய பிரச்சினை அல்ல என்றும் கூறிய அவர், ஆனால், பாடசாலைகளிலுள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
Spread the love