Home இலங்கை இயக்கச்சி வளைவு வாகன விபத்தில் மற்றும் ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிழப்பு…

இயக்கச்சி வளைவு வாகன விபத்தில் மற்றும் ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிழப்பு…

by admin


கண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மற்றும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம் இரவு (27.07.18) இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன், 4 வயதுச் சிறுமி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மற்றைய சிறுமி, பளை வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த தாய் மற்றும் தந்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More