யாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டி சந்தியினை அண்மித்த பகுதியில் வெறும் காணி ஒன்றினுள் தொடர்ந்து குப்பைகள் கொட்டுவதால் அப் பகுதி மக்கள் பெரும் அளெகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அருகில் உள்ள கடைகள், சில நபர்கள், அயல் கிராம மக்கள் அங்கே குப்பைகளை கொட்டுகின்றனர். அத்துடன் வேறு சில காணிகளிலும் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதாhகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயர் இப் பகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்றும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் பல சுகாதார பாதிப்புக்களுக்கு தாம் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.