Home இலங்கைகருணாநிதி நலம்பெற ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து கடிதம் – ஸ்டாலினிடம் கையளித்தார் ஆறுமுகம் தொண்டமான்

கருணாநிதி நலம்பெற ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து கடிதம் – ஸ்டாலினிடம் கையளித்தார் ஆறுமுகம் தொண்டமான்

by admin

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்து கடிதத்தையும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக கலைஞர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நலம் விசாரித்து வரும் நிலையில் இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரது மகன் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்ததுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுதிய வாழ்த்து கடிதத்தையும் அவர்கள் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளனர்.

‘உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்’ என ஆறுமுகம் தொண்டமான் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளாh

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More