ஈரானில் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதனையடுத்து அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக 10 நகரங்களில் மக்கள் போராட்டங்கள் மற்றும் கண்டனப் பேரணி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் ஆரம்பமான போராட்டம் தற்போது 10 நகரங்ளுக்கு பரவியுள்ளது.
போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் வீதியில் சென்ற வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த ராணுவம் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைந்துப் போகச் செய்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் தீவிரமடைந்ததனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் 10 நகரங்களி லும் காவல்துறையினரும் ;, ராணுவத் தினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்யவும் அவர்களுக்கு உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.