பிரபல இந்தி நடிகர் மான் வேட்டை வழக்கில் முன்னிலையான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு, படத்தின் படப்பிடிப்பொன்றில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்த சல்மான் கான்; தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கறுப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டபட்ட நிலையில் அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சரணடைந்த சல்மான் 6 நாட்கள் சிறைவாசம் இருந்த பின்னர் பிணையில் ; விடுவிக்கப்பட்டதுடன் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இந்தநிலையில் , படப்பிடிப்புகளில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது நீதிமன்றிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது