தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக தெரிவித்து கனடா தூதுவரை 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் அண்மையில் சில பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமைக்கெதிராக குரல் எழுப்பியிருந்த கனடா அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சவூதி, தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையிலேயே தூதுவரையும் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கனடாவில் இருக்கும் தனது நாட்டு தூதரையும் சவூதி திரும்ப பெற்றுக்கொண்டது.இதனால், இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது