தமிழகத்தின் முன்னாள முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலம் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . இந்திய நேரம் இன்று மாலை 6.10ற்கு காலமானார் என வைத்தியசாலை அறிவித்துள்ளது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமாகியதையடுத்து, நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புதுவையிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.
மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வயதுமூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இந்த செய்தி அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, நடிகர் ரஜினி உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இழப்பு தமிழகத்துக்கு பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.