இந்தியா பிரதான செய்திகள்

திருவாரூர் முதல் தலைநகர் வரை – கலைஞர் கடந்த பாதை!திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் முத்துவேலு கருணாநிதி இன்று காலமானார்.
தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு பெற்று வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது.  இந்நிலையில் 27.07.2018  அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இதையடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள் என தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இதற்கிடையே, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள் தொண்டர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்திக்கும் போது வெளியான புகைப்படங்களும் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

இந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தவலை அளிக்கும் அறிக்கை வெளியானதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால், அங்கு கூடுதல் பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வர தொடங்கினர். திமுக நிர்வாகிகளும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஒருவித குழப்பமான சூழல் அங்கு ஏற்பட்டது.

இரவு முழுவதும் அவர் உடல்நிலை குறித்து எந்த தகவல்களும் வராததால் தொண்டர்கள் கவலை அடைந்தனர். இன்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியானது.

பிற்பகலில், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதே நேரத்தில், காவேரி மருத்துவமனை வளாகத்தில் மூன்று இணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தடுப்புகள் அமைக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தை காவல் துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனினும், உறுதி குலையாத தொண்டர்கள் எழுந்து வா தலைவா என குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரின் மறைவை ஏற்க முடியாத தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாளாமல் தவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்று இரவு அவரது கோபாலபுரம் இல்லம் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும், பிரதமர் மோடியும் நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூர் முதல் தலைநகர் வரை – வாழ்க்கை வரலாறு

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது வளரும் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார்.

இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான ‘அனைத்து மாணவர்களின் கழகம்’ என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது.

கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசொலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார்.

கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, 1953-ம் ஆண்டு கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது.

தி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் ரெயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரெயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்

1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் மத்தியஅரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1957-ம் ஆண்டு அக்டோபரில் அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.

1963-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று ஐகோர்ட் உத்தரவால் விடுவிக்கப்பட்டனர்.

1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிய பிடித்தது. தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

1969 – 1971, 1971 – 1976, 1989 – 1991, 1996 – 2001, 2006 – 2011  ஆகிய ஆண்டுகளில் அவர் முதல்வராக பதவி வகித்துள்ளார். இன்றளவும் பெருமையாக கூறக்கூடிய, இன்றைய தேதியிலும் மற்ற மாநிலங்கள் கொண்டு வராத பல முற்போக்கு, முன்னேற்ற திட்டங்களை அவர் தனது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தினார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.