Home இந்தியாகேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை முதல்வர் பார்வையிட்டார்…

கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை முதல்வர் பார்வையிட்டார்…

by admin

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதல்வர் பினராயி விஜயன் எதிர்க்கட்சி தலைவருடன் சென்று ஆய்வு செய்துள்ளார்.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ள சேதங்களை ஆய்வு செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More