Home இலங்கை11 தமிழ் இளைஞர்களை கடத்தி, காணாமல் ஆக்கிய நேவி சம்பத் கைதானார்..

11 தமிழ் இளைஞர்களை கடத்தி, காணாமல் ஆக்கிய நேவி சம்பத் கைதானார்..

by admin

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத்தை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாளைய தினம் வரை அவரை தடுத்து வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக காவற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More