Home இலங்கையாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரியதர்சினி புஷ்பராஜா வெள்ளவத்தையில் தற்கொலை…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரியதர்சினி புஷ்பராஜா வெள்ளவத்தையில் தற்கொலை…

by admin


வெள்ளவத்தையில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய பிரியதர்சினி புஷ்பராஜா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இம்மரணம் குறித்து காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த பெண்ணின் சடலம் வெள்ளவத்தை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பீட்டர்சன் வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.  இவரது கணவர் ஒரு வைத்தியர் என்பதோடு இவர் இரண்டு பெண் பிள்ளைகளின் தாயுமாவார். இவர் தனது பிள்ளைகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் தனது அறைக்குச் சென்று மின் விசிறியில் தனது சாரியில் தூக்கிட்டு கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறை பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More