192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அஞ்சலி செலுத்தினார். சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு நிலையம் இன்று மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை திறந்து வைப்பதற்கு வருகை தந்த மத்திய சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாராட்ன அதற்கு முன்னதாக கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது சுகாதார பிரதி அமைச்சர், மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சாவகச்சேரி நகர சபைத் தலைவர் சிவமங்கை இராமநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love