Home உலகம்வடமேற்கு லண்டன் கிங்ஸ்பெரி நிலக் கீழ் ரெயில் நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு…

வடமேற்கு லண்டன் கிங்ஸ்பெரி நிலக் கீழ் ரெயில் நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு…

by admin


வடமேற்கு லண்டன் கிங்ஸ்பெரி நிலக் கீழ் ரெயில் நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு, இந்த சம்பவம் இடம்பெற்ற சம்பவத்தில் 2 ஆண்களும், ஒரு பெண்ணுமே காயம் அடைந்ததாகவும், 30 வயது மதிக்கத்தக்க பெண் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் எனவும், ஸ்கொட்லன்ட்யாட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு 9.45 மணியளவில் கிங்ஸ்பரி வீதியில் (Kingsbury Road, Brent) இடபெற்ற இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதல்ல எனக் தெரிவித்துள்ள காவற்துறையினர், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் உயிராபத்து இல்லை என குறிப்பிட்டுள்ளனர். சூட்டுச் சம்பவத்தை அடுத்து குறித்த வீதி மூடப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More