Home இலங்கைஇலங்கையின் சமுத்திர பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ஜப்பான் ஒத்துழைப்பு

இலங்கையின் சமுத்திர பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ஜப்பான் ஒத்துழைப்பு

by admin

இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இரண்டுநாள் உத்தியோபூர்வ பயணம் ; மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுநோரி ஒனொடேரா (Itsunori Onodera ) மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஜனாதிபதி அவர்கள் அண்மையில் மேற்கொண்டிருந்த ஜப்பானுக்கான அரச முறை பயணத்தின் போது ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தி இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜப்பானின் பிரதமர் சின்ஷோ அபே ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பெறுபேறாக இலங்கையின் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1.8 பில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு கரையோர பாதுகாப்பு இயந்திரங்களை அண்மையில் ஜப்பான் அரசாங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தனது இரண்டுநாள் பயணத்தின் போது ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More