இலங்கை பிரதான செய்திகள்

முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கான வயதெல்லை அறிவித்தல் ரத்து :


முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கான வயதெல்லை அறிவித்தல், ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீடு காரணமாக இந்த வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முச்சக்கரவண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 35 என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென, போக்குவரத்து அமைச்சரினால் வர்த்தமானி மூலமாக வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இவ்வாறான ஒழுங்குவிதிகள், தனிநபர் ஒருவரின் தொழில் உரிமையைப் பாதிக்கிறது எனவும் இளைஞர்கள், தங்களுக்கு விருப்பமான தொழிலைத் தெரிவுசெய்வதற்கு, இவ்வாறான விதிகள் தடையாக அமைகின்றன எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் இவ்வாறான ஒழுங்குவிதிகளை ஏற்படுத்துவதற்கு முன்பாக, முச்சக்கரவண்டிகளின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பல அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap