Home பிரதான செய்திகள் கோலி மீண்டும் முதலிடத்தில்….

கோலி மீண்டும் முதலிடத்தில்….

by admin

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சோபிக்காததைத் தொடர்ந்து முதலிடத்தை இழந்திருந்த கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, தனது அதிகூடிய தரவரிசைப் புள்ளிகளான 937 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்ஸில் அரைச்சதம் பெற்ற ஹர்டிக் பாண்டியா, ஒன்பது இடங்கள் முன்னேறி 51ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்ஸில் சதம் அடித்த இங்கிலாந்தின் ஜொஸ் பட்லர், தரவரிசையில் 22 இடங்கள் முன்னேறி 47ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More