Home பிரதான செய்திகள்பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவின் பிளக் பந்தர் ஆடைக்கு தடை

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவின் பிளக் பந்தர் ஆடைக்கு தடை

by admin

2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கவர்ச்சிகரமான பிளக் பந்தர் ( Black Panther) ஆடை அணியக்கூடாது என பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியானது பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடைபெறுவது வழமையாகும்.

களிமண்தரையில் சிறப்பாக விளையாடக் கூடியவரான செரீனா வில்லியம்ஸ். குழந்தை பிறப்புக்குப் பின் ஒரு வருட இடைவெளிக்குப் பின் இந்த ஆண்டு பிரஞ்சு ஓபனில் விளையாடியநிலையில் காயம் காரணமாக வெளியேறினார். எனினும் அவர் அணிந்திருந்த பிளக் பந்தர் ஆடையின் மீது ரசிகர்களுக்குக் கவனம் சென்றமை காரணமாக இவர் 2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அந்த ஆiடையை அணியக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More